மதம் மாற வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜக மருத்துவ அணி சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மத்திய அரசு நலத்திட்டங்களை பெற அடையாள அட்டைகளை இலவசமாக பதிவு செய்து பெற்றுத்தந்த பாஜக மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன்.
திருவண்ணாமலை வடஆண்டாபட்டு தீபமலை மருத்துவமனையில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு திட்டங்களை பெறுவதற்கான அடையாள அட்டைகளை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பதிவு செய்யப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டைகளை அளிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் யமுனா ஹரிகோவிந்தன் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும், பொதுமக்களையும், பயனாளிகளையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக மாவட்டத் தலைவர் R.ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு, பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஹெல்த் கார்டு, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் அரோக்ய யோஜனா மற்றும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை ஆகியவற்றை 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கினர்.
மத்திய அரசு திட்டங்களை பெறுவதற்கான அடையாள அட்டைகளை இலவசமாக பதிவு செய்து பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், மதம் மாற வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யா லுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும் மரக்கன்றுகளையும் பாஜக மருத்துவ அணி மாவட்ட தலைவர், உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் இலவசமாக வழங்கினார்.
காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பசுமையான திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்க தீபமலை ஆன்மிக அறக்கட்டளையின் சார்பாக முடிவு செய்யப்பட்டது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பொது மக்களுக்கு கொய்யா, நெல்லி உள்ளிட்ட பல வகையான மரக் கன்றுகளை அறக்கட்டளையின் நிறுவனரும், உலக சாதனையாளருமான டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், உலக சாதனையாளர்கள் ஹனிஷ்குமார், தர்ஷன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் பழனி, பொதுச் செயலாளர் மணிகண்டன், கிளை தலைவர் முனியம்மாள், நிஷா, மாரிமுத்து, ஊர் பிரமுகர்கள் மணி, லோகநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment