73வது குடியரசுதினவிழா, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் தேசியக் கொடியை ஏற்றி பாரத் மாதா கீ ஜே என்று முழக்கம்.
திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பாக 73வது குடியரசு தினவிழா கோலாகலம்.
திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் 73வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பொறுப்பு அதிகாரி கர்னல் ருசிகேசவன், ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாநிதி,
முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க மாவட்டத் தலைவர் கருணாநிதி மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடப்பட்டு, தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டனர்.
வந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையும் செலுத்தப்பட்டது.
Comments
Post a Comment