திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உதவும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் 73-வது சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பதையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
அதன் அருகில் சுமைதாங்கி பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்களது வாழ்க்கையை பற்றி புரிந்தும்,புரியாமலும் வாழும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் உதவும் கரங்கள் நிறுவனர் பப்பா வித்யாகர் ஆலோசனையின் பேரில் அங்கு நேற்று 73 -வது குடியரசு தின விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ரமணா மறுவாழ்வு மையம் முன்பு மகாத்மா காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அவர் பேசும்போது,
"மனநோயாளிகள் அனைவரும் நலம் பெற வேண்டும் .இந்த நிகழ்ச்சி அவர்கள் மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
அங்கு குடியரசு தினத்தை நினைவு படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டிருந்தது. மன நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பலூன்களை கையில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் மஞ்சுநாதன், முன்னாள் ராணுவ வீரரும் ,காப்பக நிர்வாகியுமான மணி, சுமைதாங்கி காப்பக நிர்வாகி திரிவேணி, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் செவிலியர் செண்பகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூர்த்தி ,ஏழுமலை மற்றும் சாமியார்கள் கலந்துகொண்டனர்.ன
Comments
Post a Comment