திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வர, தவில் கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது.
இந்த இசை விழா உலக மக்கள் நன்மைக்காக மாபெரும் இசை விழாவாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அருள்மிகு அண்ணாமலையாருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ சரஸ்வதி அம்பாளுக்கு இசை ஆராதனையுடன் 108 நாதஸ்வர, தவில் கலைஞர்களால் இசையுடன் ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் மாடவீதி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோயில். 16 கால் மண்டபம் அருகில் திருவண்ணாமலை இசை பள்ளி மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி, பரதநாட்டிய மாணவிகள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு கச்சேரிகள் நடைபெற்றது.
இந்த இசை விழா ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட இசை கலைஞர்களால் நடத்தப்படும் விழாவாகும். இதில் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் டி.கே.மோகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் எம்.எஸ்.குமார், பொருளாளர் பி.ஏ.கல்யாணசுந்தரம், துணைத் தலைவர்கள் எம்.எஸ்.பாண்டியன், கே.பி.ஐயப்பன், துணை செயலாளர்கள் ஏ.பி.மணிகண்டன், எம்.பி.பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க ஆலோசகர் டி.எஸ்.பி.சரவணன் இறுதியாக நன்றி உரையாணற்றினார்.

Comments
Post a Comment