ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வெள்ளி விழா பேரவை கூட்டத்தில் துணை சபாநாயகர் வெள்ளி விழா மலரை வெளியிட்டு சிறப்புரை
திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பின் வெள்ளி விழா பேரவை கூட்டம் மாவட்டத் தலைவர் தி.பு.உருத்திரப்பன் தலைமையில் நடைபெற்றது.
வெள்ளி விழா பேரவை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு வெள்ளி விழா மலரை வெளியிட்டு விழா சிறப்புரையாற்றினார்.
மேலும் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது மூத்த முன்னாள் இந்நாள் மாநில மாவட்ட கிளை பொறுப்பாளர்களுக்கு துணை சபாநாயகர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
மதிப்புறு முனைவர் மாதவ சின்ராஜ், மாவட்ட செயலாளர் பாபு கு.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வே.கமலநாதன், மாவட்ட துணை தலைவர் பொன் அன்பழகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.





Comments
Post a Comment