முன்னாள் பிரதமர், நூற்றாண்டு நாயகர் வாஜ்பாய் பிறந்தநாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி புகழ் வணக்கம் செலுத்திய பாஜகவினர்
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மலர் மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு நாயகர் வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் திருமாறன் தலைமையில் மலர் தூவி, புகழ் வணக்கம், மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர்.
முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் சிவா, அருண்குமார், சுசீந்திரன், முருகன், செந்தில், செந்தில்வேல், வெங்கடேசன், ஸ்ரீதர் ராமு, பி எஸ் சரவணன், பாக்சர் சுரேஷ், அருணகிரி, பழனி டாக்டர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் நூற்றாண்டு நாயகர் வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, புகழ் வணக்கம், மரியாதை செலுத்தினர்.



Comments
Post a Comment