விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமத்தில் சனிக்கிழமை தோறும் திருவாசக முற்றோதல் செய்வோர்க்கு மதிய உணவு, பஞ்சமுக ருத்ராட்சம் வழங்கப்படுகிறது
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமத்தில் வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெறுகிறது.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை அருட்பெருஞ்ஜோதி அகவல் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முற்றோதல் நிகழ்வில் பங்கேற்க வரும் அடியார்களுக்கு மதிய உணவு, பஞ்சமுக ருத்ராட்சம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
காலண்டர், சிவபுராணம் பதிகம், நடராஜர் பத்து உள்ளிட்ட பதிகங்கள் அடங்கிய கையேடு இலவசமாக பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனை கிரிவலம் வரும் பக்தர்களும், சன்னியாசிகளும், சாதுக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு விஜயலக்ஷ்மி ஆனந்த ஆசிரமத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மாலை 6 மணி அளவில் பயித்தம் பருப்பு பாயாசம் மற்றும் ருத்ராட்சம் உள்ளிட்டவை கிரிவல பக்தர்களுக்கு தொடர்ந்து மாதாமாதம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment