பட்டியலின மக்களின் பஞ்சமி நிலம், மயானம் இல்லாத அவலங்கள் குறித்து சமூக நீதி பொதுக்கூட்டம்! தலித் விடுதலை இயக்கம், தமிழக நீதி கட்சி ஒருங்கிணைப்பில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தமிழகத்தில் பட்டியலின மக்களின் பஞ்சமி நிலம், மயானம் இல்லாத அவலங்கள் குறித்து சமூக நீதி பொதுக்கூட்டம் தலித் விடுதலை இயக்கம் மற்றும் தமிழக நீதி கட்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தலித் விடுதலை இயக்க திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாநில இணை பொது செயலாளர் தலித் கதிர்காமன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆ.நாகராசன் துவக்க உரையாற்றினார்.
தமிழக நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தியார் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா பொதுக்கூட்டத்தின் நிறைவுறையாற்றினார்.
இறுதியாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார்.





Comments
Post a Comment