பெற்றோர்கள் சதீஷ்குமார் கவிதா இருவரும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் நிலையில் திருவண்ணாமலையில் 5 வயது செல்வமகள் வைஷ்ணவிக்கு தாத்தாவின் வீட்டில் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடியண்ணாமலையில் உள்ள அருணாச்சலா அன்னதான அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் தியாகராஜன் அவர்களின் அன்பு பேத்தி வைஷ்ணவியின் 5வது பிறந்தநாள் விழா தாத்தாவின் இல்லத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
செல்வமகள் வைஷ்ணவியின் பெற்றோர்கள் இருவரும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் நிலையில் வைஷ்ணவி திருவண்ணாமலையில் தாத்தா-பாட்டி, தியாகராஜன்- மங்கையர்க்கரசி அவர்களின் அன்பு அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.
வைஷ்ணவி யின் 5வது பிறந்தநாள் விழா முன்னிட்டு சொந்த பந்தங்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் ஏராளமானோர் புடை சூழ, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இனிப்பு கேக் வெட்டி நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினர்.
வைஷ்ணவி தாத்தா தியாகராஜன் பிரார்த்தனை மடல் படித்து உண்ணாமலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் வைஷ்ணவிக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் வழங்க வேண்டும் என்று அனைவரும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டனர்.
பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக், இனிப்பு, அறுசுவை இரவு விருந்து உணவு பரிமாறப்பட்டது.





Comments
Post a Comment