ரூ. 3 லட்சம் மதிப்பிலான விவசாய இடுபொருட்கள் வழங்கி உலகத்திலேயே முதல் முறையாக உழைக்கும் 100 விவசாயிகளுக்கு விருது வழங்கி பாராட்டு விழா
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை ரமணர் லயன் சங்கம், திருவண்ணாமலை பசுமைப் பயிர் பாதுகாப்பகம் இணைந்து முதன்முறையாக உலக விவசாயிகள் தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ரமணர் லயன் சங்கத்தின் மாவட்ட தலைவர் லயன் அக்ரி எம்.சண்முகம் தலைமையில் உழைக்கும் 100 விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆளுநர் லயன் பி.அம்சவல்லி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பன்னாட்டு இயக்குனர் லயன் எஸ்.மகேஷ் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விஞ்ஞானி கே.ரவி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். லயன் எம்.எஸ்.முருகப்பா இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட ஆலோசகர் லயன் சாயர் அரவிந்த்குமார், முதல் துணை ஆளுநர் வி பி உதயசூரியன், இரண்டாம் துணை ஆளுநர் எம் வரதராஜன், ஆர். அன்பரசு, எம் பி வெங்கட பெருமாள், வி எஸ் தளபதி. ஜி நரசிம்மன், ஆர்த்தீஸ்வரி ஆர் ராஜேந்திரன்,
இன்ஜினியர் எஸ் மதியழகன், ஆர் சத்தியசீலன், ஏஜேகே பாலாஜி, என் சத்தியகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் விவசாயிகளை முதல் முறையாக பாராட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை ரமணர் லயன் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சண்முகம் நூற்றுக்கும் மேற்பட்ட விருது பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 2000 மதிப்பிலான விவசாய இடுபொருட்களை இலவசமாக வழங்கி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.





Comments
Post a Comment