திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினர் கார்த்திகை தீபத் திருவிழா-2025 சிறப்பாக பாதுகாப்பு பணியாற்றிய 250 FOP மக்கள் நண்பர்கள் குழு மாணவர்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டினார்
திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் கார்த்திகை தீபத் திருவிழா-2025ல் சிறப்பாக பாதுகாப்பு பணியாற்றிய 250 FOP மக்கள் நண்பர்கள் குழு மாணவர்கள் சேவை பணியை பாராட்டி சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் மாண்புமிகு.கு.பிச்சாண்டி M.A.,MLA., அவர்கள் கலந்துகொண்டு மக்கள் நண்பர்கள் குழு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
உடன் திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , மக்கள் நண்பன் குழு தலைவர் ஏ. ஏ. ஆறுமுகம், அருணை இலக்கிய வட்டம் பேச்சருவி சபரி, ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர்கள் மற்றும் FOP மக்கள் நண்பர்கள் குழு மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment