1200 வீரர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 12 பேர் முதலிடம் பிடித்து சாதனை, கியோஷி ச.சரவணுக்கு கலைச்சேவகர் விருது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்காபுரத்தில் செயல்பட்டு வரும் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தமிழ்நாட்டின் 25க்கும் மேற்பட்ட பல்வேறு மாவட்டங்கலிலிருந்து சுமார் 1200 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் சந்தானம் தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 15 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சந்தானம் தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 12 பேர் முதல் பரிசு வென்று அசத்தினர், 3 பேர் இரண்டாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற கராத்தே மற்றும் சிலம்பம் மாணவர்களுக்கு மெடல், கோப்பை, இரண்டு வகையான சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசான் ச.சரவணன் MBA , M.Tech அவர்களுக்கு 45 வருட கலை திறனை பாராட்டி "கலைச் சேவகர்" விருதை திரைப்பட நடிகர் மீசை ராஜேந்திரன் வழங்கினார்.
போட்டி நடத்துநர் சங்கராபுரம் கராத்தே மணி, பெற்றோர்கள் மற்றும் ஆசான்கள் வெற்றி பெற்ற கராத்தே மற்றும் சிலம்பம் மாணவர்களை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.





Comments
Post a Comment