தீபத் திருவிழாவில் அமைதி மற்றும் மத நல்லிணக்கம் வலியுறுத்தி கருணாநிதி சுவாமிகள் தலைமையில் 108 சன்யாசிகள் பாதயாத்திரை
திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ கருணாநிதி ஸ்வாமிகள் தலைமையில் 108 சிவ பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் கலந்து கொண்ட திருக்கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை முன்னிட்டு மத நல்லிணக்கம் மற்றும் அண்ணாமலையாரிடம் வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றிட 14 கிலோ மீட்டர் நடை பயண யாத்திரை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகே துவங்கி ஈசானி லிங்கம் வரை நடைபெற்றது.
அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு மேளதாளம் முழங்க 108 சாதுக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் காமராஜர் சிலை, ரமணாஸ்ரமம், எமலிங்கம், நிருதிலிங்கம், திருநேர் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து அஷ்ட லிங்கங்கள் வழியாக அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்க நடனம் ஆடியபடி பாதுகாத்திரையாக வந்தனர்.
ராமேஸ்வரம் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாள், அகண்ட ஹிந்து ராஷ்ட்ரா திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட திரளான சாதுக்கள் சன்னியாசிகள் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்திற்கு திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் நன்றி தெரிவித்து சாதுக்களுடன் முழக்கங்களை எழுப்பினர்.





Comments
Post a Comment