3ம் ஆண்டு குடும்ப விழாவில் வறுமையில் வாடும் குடும்பத்திற்கு தையல் மெஷின் வழங்கி அமைதியாக சாதித்து வரும் சாதிக்க பிறந்த மருத்துவர் உதவும் கரங்கள் அறக்கட்டளை
திருவண்ணாமலை நகரில் அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதிக்க பிறந்த மருத்துவர் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் மூன்றாம் ஆண்டு குடும்ப விழா கடந்த இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டிஸ்கோ கே.ரவி, ஏ.சிவா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். எ.ரத்னா செந்தில்குமார், பி.சண்முகசுந்தரம், வி.மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
முன்னாள் உதவி ஆய்வாளர் எம்.குப்புசாமி, ஜி.பூபதி, என்.மாரிமுத்து ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். வேதா மகேந்திரன், பிஎஸ்என்எல் ஓய்வு எஸ்.செல்லதுரை, வி.சுப்பிரமணியன், எஸ்.ராம்குமார், ஏ டி எஸ் செல்வம், ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
தலைவர் மகாராஜன், என்.விஸ்வநாதன், சிறுகவிஞர் கே.காளிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஜி.காசிமணி ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆசிரியர் ஏ.கலைவாணி, ஜி.செல்வவிநாயகம், செயலாளர் எம்.ராஜேந்திரன், பேராசிரியர் சி.மெர்லின் சந்திரன், ஜி.தமிழ் முருகன், எம்.சார்லி சந்திரன் உள்ளிட்ட சிறப்பு பேச்சாளர்கள் அறக்கட்டளையின் வளர்ச்சி, கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.
இந்த விழாவில் கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு தையல் மெஷின் அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவியாக இலவசமாக வழங்கி உதவி கரம் நீட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தையல் மிஷினை பெற்றவர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை அறக்கட்டளைக்கு தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் சாதிக்க பிறந்த மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு குடும்ப விழாவில் அனைத்து குடும்ப உறவுகளும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் மகளிர் மற்றும் ஆண்கள் அனைவரும் ஒரே நிறத்திலான உடை அணிந்து ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தரம் வாய்ந்த பல்வேறு யோகாசனங்களை வேதாக கல்லூரி உரிமையாளர் மகேந்திரன் அவர்களின் செல்வமகள் செய்து காட்டி அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம், யோகா, கராத்தே, சிலம்பம், பாடல், கவிதை, பேச்சு உள்ளிட்ட தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் இறுதியாக ஈகிள் என்.ஏழுமலை, என்.செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் நன்றியுரை ஆற்றினர். வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மருத்துவ சமூகம், தம்மை சுற்றியுள்ள மாற்று சமூகத்திற்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற மகத்தான நோக்கத்தில் செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.










Comments
Post a Comment