திருவண்ணாமலை அருணை மாநகருக்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அர்ஜுன் சம்பத் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவருக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சார்பில் மலர் மாலை அணிவித்து கோயில் பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில்,
அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
பெகல்காமில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பார்கள்.
திருப்பதி போல் வளர்ந்து வரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நீர்மோர், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். முதியோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தனி வரிசை அமைத்து அவர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் இடையே பேட்டியளித்தார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் விஜயராஜ் சிறப்பான வரவேற்பு அளித்து அவருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment