சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் பேச்சு
திருவண்ணாமலை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தில் திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர் பக்தவச்சலம், வன்னியர் சங்க செயலாளர் நாராயணசாமி, ஜெயக்குமார், கனல் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்டச் செயலாளர் பக்தவச்சலம் பேசுகையில் கூறியதாவது, பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து திரளான தொண்டர்களை தங்கள் குடும்பத்துடன் அழைத்து வர வேண்டும். வருபவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் ஆகியவை முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களை முன்னதாகவே புக்கிங் செய்து கொள்ள வேண்டும் , கடைசி நேரத்தில் சென்றால் வாடகை அதிகரிக்கக்கூடும் வாகனங்களும் கிடைப்பதற்கு சிரமம் ஏற்படும் என்று மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தனது உரையின்போது நிர்வாகிகளுக்கு ஆலோசனையாக வழங்கினார்.
ஒன்றிய தலைவர் தமிழ்வாணன், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், மீசைக்காரர் குப்பன், தானத்தையன், சிவா, மெக்கானிக் சிவா, மேஸ்திரி திருமலை, சசிகுமார், அண்டம்பள்ளம் பவுன்குமார், வன்னியநகரம் குமார் , வன்னிய நகரம் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment