பட்டாசு வெடித்து மேல தாளங்கள் முழங்க சிவன், காளி உள்ளிட்ட வேடம அணிந்து நடனம் ஆடிய படி மயானம் கொள்ளை உற்சவம் கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், பெரியகல்லந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரி உற்சவ திருவிழா தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மன் சிரசுகளுக்கு கண் திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் மயான கொள்ளை விடுவதற்கு பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் முழங்க, சிவன் காளி உள்ளிட்ட வேடமணிந்து நடனம் ஆடிய படி திரளான பக்தர்களும் மயானம் சென்றனர். அங்கு மயான கொள்ளை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தர்கள் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி அம்மனை வேண்டினர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நோய்வாய்ப்பட்டு துன்பப்படுபவர்கள், பில்லி சூனியம் பேய் பிசாசு உள்ளிட்டவற்றால் அவதிப்படுபவர்கள், குடும்ப பிரச்சினைகளில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசித்து வழிபட்டு வேண்டினால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது இந்த கோயிலின் சிறப்பு அம்சமாகும் என்று கோயில் நிர்வாகி மணி தெரிவித்தார்





Comments
Post a Comment