திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் ஶ்ரீ சாய் வித்யாஷ்ரம் மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பயிற்சி பள்ளியின் கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் எஸ்.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். கராத்தே பயிற்சி பெற்ற 10 மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை பள்ளித் தாளாளர் எஸ்.செங்குட்டுவன் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
அகில இந்திய தலைவர் (JSKDI) கியோஷி A.ரமேஷ் பாபு சான்றிதழ் மற்றும் கராத்தே பெல்ட் வாங்கிய கராத்தே மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். கராத்தே சங்க மாவட்ட தலைவர், கராத்தே பயிற்சியாளர் ஷீகான் சரவணன்.ச MBA, MTech பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில் உடன் இருந்தார்.

Comments
Post a Comment