திருவண்ணாமலை நகரின் காமராஜர் சிலை அருகே புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசி வரும் சங்கி சீமானை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றி தலைமை தாங்கினார். பரணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசி வரும் சங்கி சீமானை கைது செய்ய வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய பொதுவுடமை கட்சியின் தங்கராஜ் , திராவிடர் கழகம் பழனி, பன்னீர்செல்வம், தோழர்கள் பசுமைச்செல்வன், சந்திரசேகரன், வழக்கறிஞர் நேரு உள்ளிட்ட பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சீமானை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவதூறு பேசுவதற்காகவே ஆரிய கைக்கூலியான சங்கி சீமானுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த தமிழிசை, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிப்பதால் சீமானை அவர்கள் தான் பெரியாரை இழிவுபடுத்த பயன்படுத்துகின்றனர் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் கூறினர்.





Comments
Post a Comment