நீதியரசர் ஆணைப்படி மின்சார தொழிலாளர் சம்மேளன பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் திருவண்ணாமலை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டத் தலைவர் எஸ்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஜி.சொக்கலிங்கம் ஆணைப்படி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக மீண்டும் எஸ்.சக்திவேல், வட்டச் செயலாளராக கே.சம்பத், பொருளாளராக கே.தட்சிணாமூர்த்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் வட்டத் உப தலைவர்கள் மற்றும் வட்ட இணை செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் நீதியரசருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு, மேற்கு ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, செங்கம், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கோட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரளான மின்சார சம்மேளன தொழிலாளர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினர்.

Comments
Post a Comment