திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் திருவண்ணாமலை ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் லிஸ்ட் கட்சியின் முதலாம் ஆண்டு உள்ளூர் கமிட்டி மாநாடு திருவண்ணாமலை அடுத்த அடியண்ணாமலை கிராமத்தில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் சங்கர் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில குழு உறுப்பினர் ஐயன்துறை , மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், கட்சியின் வழக்கறிஞர் வி.நடராஜன், சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட குழு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணி அடி அண்ணாமலை கிராமத்தின் மாணிக்கவாசகர் கோயிலில் துவங்கி அருணாச்சலேஸ்வரர் கோயில் வரை முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
எம்.ஆறுமுகம், சங்கர், நாராயணன், செல்வகுமார், செல்வகணேஷ், முருகன், அண்ணாமலை, சந்திரசேகர், விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளூர் கமிட்டி பொறுப்பாளர்களாக மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஒன்பது பொறுப்பாளர்களும் இணைந்து ஒன்றிய செயலாளர் சங்கரை ஒருமனதாக தேர்வு செய்தனர்.
சோ.கீழ்நாச்சிபட்டு கிராமத்தில் உள்ள மக்களுக்கு அதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கண்டியாங்குப்பம் கிராமத்தில் தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு வேலை கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டின் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக ஒன்றிய நிர்வாகிகள் வேல்முருகன், ஆனந்தன் நன்றி உரை கூறினர்

Comments
Post a Comment