திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மண்டல அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் தேர்தலில் R.யுவராஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருவண்ணாமலை நாயுடுமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி என்.அகிலாசூரி கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் R..யுவராஜிஅவர்களை ஒன்றிய தலைவர் பொறுப்பில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தி பேசினார். பின்னர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் திரு. ஆர்.பாலசுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய தலைவரை வாழ்த்தி பேசினர்.
ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு உலகத் தலைவர், பாரதத் தந்தை, பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி, தமிழகத்தின் இளைய சிங்கம் K.அண்ணாமலை ஐபிஎஸ் , வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான அக்கா திருமதி கார்த்தியாயினி , மாவட்ட பார்வையாளர் தசரதன் , மாவட்ட தலைவர் அண்ணன் ஆர்.பாலசுப்பிரமணியன், விவசாய அணி தலைவர் பிரகாஷ், ஓ.பி.சி அணி ரகுநாதன் பெரியசாமி பொதுசெயலாளர் திரு ராஜ்குமார் ராஜேந்திரன் குமார் வள்ளி திருமதி குமாரி இளைஞரணி தலைவர் திரு .ராமசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட, நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியை R .யுவராஜி அவர்கள் தெரிவித்துக் கொண்டுள்ளார்.




Comments
Post a Comment