திருவண்ணாமலை நகரின் ராஜராஜன் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவக்கத்தை குறிக்கும் கொடியேற்ற நிகழ்வானது நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கொடி ஏற்றத்திற்கான கொடிசீலை தேவாங்கர் குலத்தவர்களால் ஊர்வலமாக எடுத்துச் சென்று அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கினர்.
இந்த கொடிசீலை வழங்கும் நிகழ்வு தீபத் திருவிழா தொடங்கிய காலத்தில் இருந்து தோன்றுதொட்டு கொடிசீலையானது தேவாங்கர் குலத்தவர்களால் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவாங்கர் குலத்தவர்கள் சார்பில் கொடிசீலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தீபத்திருவிழா துவங்கிய காலம் முதல் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பெரிய கோயில் குருக்கள் சோனாசல பீடத்திற்கு வந்து அழைப்பு விடுத்தார்.
பின்னர் ராஜராஜன் தெருவில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூஜை செய்யப்பட்டு தேவாங்கர் குலத்தவர்கள் சோனாசல பீடம் சார்பில் தேவாங்கர் குலத்தவர்கள் கொடிசீலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வழங்கினர்.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி சீலையை தேவாங்கர் குலத்தவர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.







Comments
Post a Comment