ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா முன்னிட்டு கிரிவலப் பாதையில் உள்ள ராகவேந்திரா மடத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி கௌரவித்தனர்.
கிரிவலப்பாதை ராகவேந்திரா மடத்தில் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் அருகில் அமைந்துள்ள ராகவேந்திரா மடத்தில் ஸ்ரீ சத்யசாய் சேவா டிரஸ்ட் மூலம் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழாவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பக்தர்கள் வீசிச் சென்ற குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மையாக வைத்துக் கொண்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சுமார் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினர்.
கிரிவல பாதையில் உள்ள 1600 க்கும் மேற்பட்ட சதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக ராகவேந்திரனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான சாதுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.





Comments
Post a Comment