ரூ. 2000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய ரமணா தொண்டு நிறுவனம்
திருவண்ணாமலை நகரில் உள்ள யோகிரம் சுரத்குமார் ஆசிரமம் எதிரில் உள்ள போளூர் அண்ணம்மாள் கட்டிட அரங்கில் ஸ்ரீ ரமண மகரிஷி அகாடமி ஃபார் த பிளைன்ட் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கு உலக மாற்றுத்திறனாளி தின விழா முன்னிட்டு புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 2000 மதிப்பிலான மளிகை பொருட்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
அரிசி, பருப்பு, புளி, சமையல் எண்ணெய், வெல்லம், சோப்பு, உப்பு உள்ளிட்ட அனைத்து வகையான மளிகை பொருட்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருள் தொகுப்பில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், வாட்டர் பெட் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி உபகரணங்களும் வழங்கப்பட்டது.
அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் பாலாஜி ஆறுமுகம், மருத்துவர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிறுவனத்தின் திட்ட நிர்வாகிகள் சக்திவேல், சந்தோஷ் பாண்டே ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.





Comments
Post a Comment