Skip to main content

Posts

Showing posts from December, 2024

ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் R.யுவராஜி

  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மண்டல அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் தேர்தலில் R.யுவராஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவண்ணாமலை நாயுடுமங்கலத்தில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி என்.அகிலாசூரி கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் R..யுவராஜிஅவர்களை ஒன்றிய தலைவர் பொறுப்பில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தி பேசினார். பின்னர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  மாவட்ட தலைவர் திரு. ஆர்.பாலசுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஏராளமான பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய தலைவரை வாழ்த்தி பேசினர்.  ஒன்றிய தலைவராக  தேர்ந்தெடுத்ததற்கு உலகத் தலைவர், பாரதத் தந்தை, பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி, தமிழகத்தின் இளைய சிங்கம் K.அண்ணாமலை ஐபிஎஸ் , வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான அக்...

ரூ. 2000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய ரமணா தொண்டு நிறுவனம்

https://youtu.be/AZg6_GVQazc    திருவண்ணாமலை நகரில் உள்ள யோகிரம் சுரத்குமார் ஆசிரமம் எதிரில் உள்ள போளூர் அண்ணம்மாள் கட்டிட அரங்கில் ஸ்ரீ ரமண மகரிஷி அகாடமி ஃபார் த பிளைன்ட் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கு உலக மாற்றுத்திறனாளி தின விழா முன்னிட்டு புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 2000 மதிப்பிலான மளிகை பொருட்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.  அரிசி, பருப்பு, புளி, சமையல் எண்ணெய், வெல்லம், சோப்பு, உப்பு உள்ளிட்ட அனைத்து வகையான மளிகை பொருட்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருள் தொகுப்பில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், வாட்டர் பெட் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி உபகரணங்களும் வழங்கப்பட்டது.  அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் பாலாஜி ஆறுமுகம், மருத்துவர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர்....

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா முன்னிட்டு கிரிவலப் பாதையில் உள்ள ராகவேந்திரா மடத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி கௌரவித்தனர்.

  கிரிவலப்பாதை ராகவேந்திரா மடத்தில் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் அருகில் அமைந்துள்ள ராகவேந்திரா மடத்தில் ஸ்ரீ சத்யசாய் சேவா டிரஸ்ட் மூலம் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பக்தர்கள் வீசிச் சென்ற குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மையாக வைத்துக் கொண்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சுமார் 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினர். கிரிவல பாதையில் உள்ள 1600 க்கும் மேற்பட்ட சதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ராகவேந்திரனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான சாதுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தீபத் திருவிழா தொடங்கிய காலம் முதல் கொடிசீலை வழங்கும் தேவாங்கர் குலத்தவர்கள்

  திருவண்ணாமலை நகரின் ராஜராஜன் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவக்கத்தை குறிக்கும் கொடியேற்ற நிகழ்வானது நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொடி ஏற்றத்திற்கான கொடிசீலை தேவாங்கர் குலத்தவர்களால் ஊர்வலமாக எடுத்துச் சென்று அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கினர்.  இந்த கொடிசீலை வழங்கும் நிகழ்வு தீபத் திருவிழா தொடங்கிய காலத்தில் இருந்து தோன்றுதொட்டு கொடிசீலையானது தேவாங்கர் குலத்தவர்களால் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  தேவாங்கர் குலத்தவர்கள் சார்பில் கொடிசீலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தீபத்திருவிழா துவங்கிய காலம் முதல் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பெரிய கோயில் குருக்கள் சோனாசல பீடத்திற்கு வந்து அழைப்பு விடுத்தார். பின்னர் ராஜராஜன் தெருவில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூஜை செய்யப்பட்டு தேவ...