திருவண்ணாமலை மாவட்டம், சு. வாளவெட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராதா கிருஷ்ணா, ஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீ பாண்டுரங்கர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வினை தரிசித்து ஸ்ரீ ராதா கிருஷ்ணா உள்ளிட்ட சுவாமிகளை வழிபட்டு அருள்பெற்றனர்.
முன்னதாக வாஸ்து சாந்தி, அனுக்ஞை, நவரத்தின பிரதிஷ்டை, கோபுர கலசங்கள் நிறுவுதல், யாகசாலை பிரவேசம், ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கியது.
பின்னர் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், விசேஷ ஹோமங்கள், கும்ப ஆராதனம், பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ ராதா கிருஷ்ணா, ஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீ பாண்டுரங்கர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அருள்மிகு ஸ்ரீ ராதா கிருஷ்ணா, ஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீ பாண்டுரங்கர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நடராஜன் தமிழரசி, திருமலை ஆகியோர் தலைமையில், அண்ணாமலை அம்பிகா, பாண்டியன் ஹேமலதா, குப்பன் சுமதி, அறிவழகன் இளவரசி ஆகியோர் முன்னிலையில் அருள்மிகு ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலய விழா குழுவினர், சு.வாளவெட்டி கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தினர்.
ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா பஜனை குழுவினரின் பக்தி பஜனை பாடலுடன் அருள்மிகு ஸ்ரீ ராதா கிருஷ்ணா, ஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீ பாண்டுரங்கர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகளின் வீதி உலா ஊர்வலமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.





Comments
Post a Comment