திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பதிவு மூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி வழங்கிட வலியுறுத்தி மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு எழுத்து தேர்வு பொருத்தமற்றது என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கூறியதன் அடிப்படையில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Comments
Post a Comment