பட்டா நிலத்தில் குப்பைகளை கொட்டி, குளம் வெட்டி ஜாதியை சொல்லி திட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை கோரி பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் ராயண்டபுரம் மதுரா விஜயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணிக்கம் மகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பஞ்சமி இடத்தில் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஜெயபிரகாஷ் அத்துமீறி ஊர் குப்பைகளை கொட்டுவதும், குளம் வெட்டி வருவதையும் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதையும் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் என்.ஏ.கிச்சா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறிவித்திருந்தனர்.
இதனிடையே பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்படுத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது விஜயப்பனூர் முருகேசன் இடத்தை மீட்க வேண்டும், பட்டா நிலத்தில் பஞ்சாயத்து சாலை போட்டதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், பட்டா இடத்தில் குளம் வெட்டுவதை தடுக்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஜெயபிரகாஷ் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா சிறப்பு அழைப்பாளராக பேச்சுவார்த்தையில் பங்கேற்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு நிலத்திற்கான கோப்புகள் அனைத்தையும் வழங்கினால் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார்.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் இரா.அண்ணாமலை, சி.ஐ.டி.யு நாய்கனூர் ரவி, தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர்கள் தலித் ஜெயக்கொடி, ஸ்ரீதரன், விசிக ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன், தென்னிந்திய பழங்குடியினர் சங்கம் பழங்குடி முருகன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கதிர்காமன்,
மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் முரளிதமிழன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் மு.ரங்கநாதன், இளைஞரணி செயலாளர் ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பலர் பேச்சு வார்த்தையின் போது உடன் இருந்தனர்.





Comments
Post a Comment