திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கொழுந்தம்பட்டு மதுரா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ கங்கையம்மன் ஆலய ஜீரணோதாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு சக்தி விநாயகர், பாலமுருகர், ஸ்ரீ கங்கையம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்து அம்மன் அருள் பெற்றனர்.
அருள்மிகு சக்தி விநாயகர், பாலமுருகர், ஸ்ரீ கங்கையம்மன் ஆலய விழா குழுவினர், கொழுந்தம்பட்டு மதுரா கிருஷ்ணாபுரம் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தினர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் புறப்பட்டு ஸ்ரீ கங்கையம்மன் ஆலய கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் மீது புனித நீர்த்துளிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.





Comments
Post a Comment