திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள திருக்குறிப்பு தொண்ட நாயனார் மடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வட தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வி.ஹெச்.பி ஸ்தாபன தினம், 60ம் ஆண்டு பூர்த்தி விழா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் திரளான குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து கோலாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டி அசத்தினர்.
பின்னர் உரியடி திருவிழா நடைபெற்று கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.



Comments
Post a Comment