அகில இந்திய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்ட சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி பள்ளி மாணவர்கள் 25 பேர் முதலிடம் பிடித்து அசத்தல்
சென்னை ஐ.சி.எப் பழனிசாமி பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் அகில இந்திய கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1250 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
கராத்தே போட்டிகளில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி பள்ளி கராத்தே மாணவர்கள் 45 பேர் ஷீகான் சரவணன்.ச MBA, MTech National Referee A Grade--KIO and National coach தலைமையில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.
அகில இந்திய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்ட சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி பள்ளி கராத்தே மாணவர்கள் 25 பேர் முதல் பரிசினை தட்டி சென்றனர். 15 கராத்தே மாணவர்கள் இராண்டாம் பரிசு மற்றும் 5 மாணவர்கள் மூன்றாவது பரிசினை பெற்றனர்.
கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு உதவி பயிற்சியாளர் கு.ராஜசேகர் வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவர்களை ஊக்குவித்தார்.
கராத்தே போட்டிகளில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சென்னை M.K.சசிகுமார் சிறப்பான முறையில் செய்திருந்தார்.





Comments
Post a Comment