200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அருள்தரும் அம்மாச்சாரம்மன் திருக்கோயில் ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று பக்தி பரவசம் முழங்க சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் கொத்தந்தவாடி கிராமத்தில் அம்மச்சார் அம்மனாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எழுந்தருளி தங்கள் குலதெய்வமாக முன்னோர்கள் வழிபட்டு வந்த அருள்தரும் அம்மாச்சாரம்மன் திருக்கோயில் ஜீர்னோத்தாரன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொத்தந்தவாடி, மங்கலம், எரும்பூண்டி, கருமாரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வினை ஓம் சக்தி, ஓம் சக்தி என்று பக்தி பரவசம் முழங்க தரிசித்து அம்மனை வழிபட்டு அருள்பெற்றனர்.
முன்னதாக நேற்று மங்கள இசை, மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், கோபுர கலசங்கள் நிறுவுதல், முதற்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கியது.
இன்று காலை மங்கள இசையுடன் முதற்கடவுள் பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு விசேஷ ஹோமங்கள், நாடி சந்தானம், பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்தரும் ஶ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலய விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என்று பக்தி பரவசம் முழங்க சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அருள்தரும் அம்மாச்சார் அம்மன் திருக்கோயில் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஸ்ரீ அம்மச்சார் அம்மன் குலதெய்வ வழிபாட்டு குழுவினர், கொத்தந்தவாடி கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தினர்.





Comments
Post a Comment