திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரை சுற்றியுள்ள பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பொதுமக்கள் பயணிக்க பாதுகாப்பற்ற சாலைகளாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருவதால் போளூர் பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பு அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி போளூர் நகரில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் ஒன்றிணைந்து திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் போளூர் புறவழி சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் நிகழும் சாலை விபத்துகளால் போளூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல போதுமான பாதை வசதி இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக போளூர் நகரில் மெத்தனமாக பணிகள் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகளால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் வியாபாரிகளும் விவசாயிகளும் அல்லல்பட்டு வருவதால் விரைவாக ரயில்வே மேம்பால பணிகள் நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் வாயிலாக எடுத்துரைத்தனர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.
போளூர் பகுதி மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
போளூர் தலைவர் ராணி சண்முகம், ராமஜெயம் செந்தில்குமார், பகவான் வெங்கடேசன், கல்பனா ஜுவல்லரி ரோஷன், செங்குணம் தலைவர் யாசிம், வெண்மணி தலைவர் கணேசன், ரெண்டேரிப்பட்டு தலைவர் கருணா, ஜெயின் ஜுவல்லரி ராஜேஷ், வினோத்,எஸ்.ஆர் சக்திவேல் , எஸ்.ஆர். ராமச்சந்திரன், கௌதம் குமார், கேபிள் ராஜா, லயன்ஸ் கிளப் மகேந்திரன், மனோஜ், அபிராமி சிவக்குமார், சாதனா வினோத், குன்னத்தூர் கிருஷ்ணராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும், விபத்துக்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
போளூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை சட்டமன்ற மானிய கோரிக்கைகளில் பலமுறை தெரிவித்தும் தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.
போளூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் 15 தினங்களுக்குள் தமிழக அரசு பணிகளை முடிக்காவிட்டால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவை பெற்று போளூர் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுக சார்பில் போளூர் பகுதி மக்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இங்கு நடத்தப்படும்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் திமுக அரசு போளூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால் அதற்கான பலனை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தருவார்கள் என செய்தியாளர்களிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.





Comments
Post a Comment