விஸ்வகர்மா சங்கத்திடம் அனுமதி பெற்று நகை மதிப்பீட்டாளர்களை பணியமர்த்த வேண்டும் என விஸ்வகர்மா ஆப்ரைசர்ஸ் யூனியன் தீர்மானம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வெண்மணி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விஸ்வாஸ் விஸ்வகர்மா ஆப்ரைசர்ஸ் யூனியன் முதல் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நகை மதிப்பீட்டாளர்கள் கலந்து கொண்டு சங்கத்தை வளர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
விஸ்வகர்மா அல்லாத மாற்று சமூகத்தினர் நகை மதிப்பீட்டாளர் சான்று பெற்று அவர்கள் வங்கியில் பணிபுரிந்து நகைகள் தரம் பார்ப்பதில் ஏற்படும் குற்றங்களை விளம்பரம் செய்யும் போது அந்த நகை மதிப்பீட்டாளர் விஸ்வகர்மா இல்லை என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
விஸ்வகர்மா அல்லாத நகை மதிப்பீட்டாளர்கள் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி நியமனம் செய்யும் முன்பாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள விஸ்வகர்மா சங்கத்திடம் அனுமதி பெற்று பணியமர்த்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Comments
Post a Comment