கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் பக்தர் வடை எடுத்து நேர்த்திக் கடன், அலகு குத்தி, செடல் தேர் இழுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், சடையனோடை கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் திருக்கோயிலில் 8ம் ஆண்டு ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். பின்னர் மஞ்சள், பூட்டுமாவு இடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனை அடுத்து அக்கினி காவடி, செடல் தேர், டிராக்டர், பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து தங்கள் நேற்று கடனை செலுத்தினர்.
பின்னர் கொதிக்கும் எண்ணெயில் தனது வெறும் கையால் பக்தர் வடையை எடுத்து தனது நேர்த்திக் கடனை செலுத்தினார். அந்த வடையை பெண்கள் வாங்கி சாப்பிட்டனர். கொதிக்கும் எண்ணையில் இருந்து பக்தர் எடுத்த வடையை சாப்பிட்டால் திருமண பாக்கியம், குழந்தை வரம் உள்ளிட்ட தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இரவு கரகாட்டம், வான வேடிக்கை, பம்பை, உடுக்கை, ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் சுவாமி வீதி உலா நடைபெறும் என்பதை குறிப்பிடத்தக்கது. குழந்தை வரம் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் தனக்கு குழந்தை பிறந்ததை அடுத்து குழந்தையின் எடைக்கு சமமான காசுகளை எடை போட்டு தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
ஆடி கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு நாள் முழுவதும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment