தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் நகர பேருந்து நிலையம் அருகே அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பாக இந்து மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி சீனிவாசன் அவர்கள் சிறப்பு பேருரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் செஞ்சி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
அகில இந்திய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மகாலட்சுமி அவர்கள் தலைமை உரையாற்றி தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக ஆர்வலர் ஒப்பந்ததாரர், அருள்முருகன் அவர்களும், தேச பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு நவோதயா பள்ளிகளின் பயன்களை பட்டியலிட்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
தொடர்ந்து சமூக நீதி ஆர்ப்பாட்டமானது நவோதயா பள்ளிகள் வேண்டும் என்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது.
தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும், தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும், கல்வி கொள்ளையைத் தடுத்திட வேண்டும், நவோதயா பள்ளிகளை தமிழகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.





Comments
Post a Comment