பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை தேர்வு செய்த பணி ஆணையை நிறுத்தி வைக்க வேண்டி நண்பர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி பேருந்து நிலையம் அருகில் வீடு வழங்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து நண்பர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி பஞ்சாயத்தில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் போது கடலாடி ஊராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரிவிக்காமல் பஞ்சாயத்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமலும் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை தேர்வு செய்து பணியாணை வழங்க உள்ள கலசபாக்கம் ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் கடலாடி பஞ்சாயத்து செயலாளர் ஆகியவர்கள் தேர்வு செய்து தயாரித்து உள்ள பணி ஆணையை நிறுத்தி வைக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலாடி ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் போது அரசு ஒதுக்கிய 60 வீடுகள் போதுமானதா என்ற கேள்வி எழுப்பினர். எனவே கடலாடி ஊராட்சிக்கு அதிகமான வீடுகளை ஓதிக்கீடு செய்ய வேண்டும், 35 வருடங்களுக்கு முன்னர் அரசு வழங்கிய ஆமை வீடுகளுக்கு புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
கடலாடி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் சதீஷ்குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். நண்பர்கள் சங்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் முருகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். சமூக ஆர்வலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கடலாடி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் சதீஷ்குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார். நண்பர்கள் சங்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் முருகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். சமூக ஆர்வலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கடலாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி தமிழ்செல்வம், வார்டு உறுப்பினர்கள் ரேவதி சீனிவாசன், வேடியம்மாள் நாராயணசாமி, மனோகரன், புகழ், வசந்தி பாலமுருகன், பஞ்சவர்ணம் சேகர், முருகன், சுசீலா முருகன், மணிகண்டன், ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், பி எஸ் பி மாவட்ட செயலாளர் சக்திவேல், மக்கள் புரட்சிக் கழகம் நிறுவனத் தலைவர் வர்க்கீஸ், தலித் விடுதலை இயக்கம் கிச்சா உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இறுதியாக எழில்மாறன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.




Comments
Post a Comment