திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுறம் ஒன்றியம், ஊதிரம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில்
மகாபாரத அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்..
ஊதிரம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா கடந்த 22 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி மகா மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் தெருக்கூத்து நாடகங்கள் என தினந்தோறும் நடைபெற்று வந்தது, ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
மகாபாரத அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் இன்று தத்ரூபமாக துரியோதனன் திருவுருவம் தயார் செய்யப்பட்டு பாஞ்சாலி சபதம் நிகழ்வையும் துரியோதனனை வதம் செய்யும் காட்சியும் தத்ரூபமாக நாடக நடிகர்கள் நடித்துக் காட்டினர், இதில் ஊதிரம்பூண்டி கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதனைத் தொடர்ந்து இன்று மாலை திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

Comments
Post a Comment