திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளானந்தல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமலை வள்ளி தெய்வானை சமேத கல்யாண முருகர் ஆலயத்தில் 56 ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்யாண முருகருக்கு இன்று அதிகாலை அபிஷேக ஆராதனையும், பின்னர் மங்கள தீபமும் நடைபெற்றது. மாலை ஊஞ்சல் திருவிழாவும் இடும்பன் கடம்பன் மகா கும்பமும் நடைபெற்றது.
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேரு இல்லாதவர்கள் இந்த கோயிலில் வேண்டிக் கொண்டதும் ஏராளமான இளைஞர்களுக்கு திருமணம் நடந்துள்ளது, குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் தர்மகர்த்தா என்.கந்தசாமி, நிர்வாக குழுவினர் எஸ் எம் முருகேஷ், டிஜி முருகன், எஸ் முருகன், ஆர்.மதியழகன், சி அர்ஜுனன், பி விஜயராஜ், கே பரதன், ஆர் நாகேஷ், எஸ் ஏழுமலை, எஸ். சிவ சரவணன், எம்.பூமிநாதன், கோயில் பூசாரி ஏ கே முருகன், மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆடி கிருத்திகை திருவிழாவை சிறப்பான முறையில் நடத்தினர்.

Comments
Post a Comment