வேறு எங்கும் இல்லாத வகையில் திரௌபதி அம்மன் ஆலய பிரத்யேக தேர் திருவிழா, 50 அடி உயரம் கொண்ட தேறினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
திருவண்ணாமலை மாவட்டம், சின்னியம்பேட்டை கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மகாபாரத விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு என ரத தேரோட்டம் நடைபெறுவது வேறு எங்கும் இல்லாத தலையில் இக்கோயிலின் சிறப்பம்சமாகும். 50 அடி உயரம் கொண்ட திரௌபதி அம்மன் தேறினை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திரௌபதி அம்மன் ஆலய பிரத்யேக தேர் திருவிழா,
50 அடி உயரம் கொண்ட தேறினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
விநாயகர் சிலை கொண்ட தேர் முதலில் செல்ல அதனை அடுத்து ஸ்ரீ திரௌபதி அம்மன் ரதம் உள்ளிட்டவை ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக வந்தது.
சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது மேளதாளம் முழங்க கோலாட்டம், இளைஞர்கள் குத்தாட்டம் மற்றும் வானவேடிக்கை எனக் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது.
திரௌபதி அம்மன் தேர் திருவிழாவை அடுத்து துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழாவும் வெகு விமரிக்கையாக நடைபெற உள்ளது.
அசம்பாவித சம்பவங்கள் தடுக்கும் விதமாக போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Comments
Post a Comment