3 புதிய குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே 3 புதிய குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமஸ்கிருத பெயரை திணித்து ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி, காவல்துறைக்கு கட்டற்ற அதிகாரம் அளித்து, பாசிச மயமாக்கப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முன்னணி தோழர்கள், தேசிய ஜனநாயக ஆற்றல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.
சட்டம், நீதி யாவும் மக்களுக்கே என்றும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் ஓயாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் பசுமைச் செல்வன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார், சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார்,
தோழர் வெற்றி, தோழர் வேதாச்சலம், தோழர் வெற்றிச்செல்வன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோழர் ராசித், பகுத்தறிவாளர் கழகம் தோழர் பன்னீர்செல்வம், தமிழ் வழி கல்வி இயக்கம் தோழர் சின்னப்பா தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் நேரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Comments
Post a Comment