ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை பள்ளி கட்டிடத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுக்கா, மே.காட்டுக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
அவருடன் ஆராஞ்சி ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் கேசவன், வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமலு, வார்டு உறுப்பினர் சீனிவாசன், எஸ் எம் சி தலைவர் திருமதி ஹரிசங்கரி விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சீதாராமன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஊர் பெரியவர் கிருஷ்ணன், ஐ டி கே தன்னார்வலர்கள், ஆஷா தொண்டு நிறுவன ஆசிரியர் காயத்ரி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளியின் உதவி ஆசிரியர் செல்வலட்சுமி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.





Comments
Post a Comment