12 ஆண்டுகளாக கட்டப்படும் மேம்பாலத்தை திறந்து, சாலை விரிவாக்கம் செய்து விபத்துக்களை தடுக்க வலியுறுத்தி அகிம்சை வழியில் ஏராளமான பொதுமக்கள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வெண்மணி கிராமம் எம்.கே.பி பெட்ரோல் பங்க் எதிரில் கடந்த 12 ஆண்டு காலமாக போளூர் மேம்பால பணிகள் முடிவடையாத காரணத்தால் ஏற்படும் விபத்துகளை தடுத்திட வலியுறுத்தி அகிம்சை வழியில் எஸ்.ஆர் ரியல் எஸ்டேட் அம்பானி குழுமம் உரிமையாளர் சக்திவேல் அவர்கள் தலைமையில், அவரது சகோதரர் எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஏற்பாட்டில் அகிம்சை வழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் போளூர் தலைவர் ராணி சண்முகம், ராமஜெயம் செந்தில்குமார், பகவான் வெங்கடேசன், கல்பனா ஜுவல்லரி ரோஷன், செங்குணம் தலைவர் யாசிம், வெண்மணி தலைவர் கணேசன், ரெண்டேரிப்பட்டு தலைவர் கருணா, ஜெயின் ஜுவல்லரி பப்பு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் போளூர், வெண்மணி, பாப்பம்பாடி, செல்வம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.
போளூர் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும், பைபாஸ் சாலைகளின் மையப்பகுதிகளில் பேரிகாடுகளை அமைத்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தும் விதமாக அகிம்சை வழி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு சாலை விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று அகிம்சை வழியில் அரசுக்கு வலியுறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும், சாலையில் மையப்பகுதிகளில் பேரிக்காடு அமைக்க வேண்டும், கடந்த 12 ஆண்டு காலமாக மேம்பால பணிகள் முடிவடையாமல் இருப்பதால் பொதுமக்கள் பைபாஸ் சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அகிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





Comments
Post a Comment