திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில், தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நல சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத் துணைத் தலைவர் S.வடிவழகன் (எ) ராஜா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இதில் மோட்டார் வாகன ஆலோசகர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை பெற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக நகர வர்த்தக சங்கத் தலைவர் வடிவேல், ரவிச்சந்திரன் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலத் துணைச் செயலாளர் N.ராம் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.



Comments
Post a Comment