அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் மதுரா பாரதி நகர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நேற்று காலை கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, புதிய சிலைகள் கண் திறத்தலுடன் துவங்கியது.
பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மங்கலம் மதுரா பாரதி நகர் கிராம பொதுமக்கள், விழா குழுவினர் இந்த கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தினர்.





Comments
Post a Comment