அருள்மிகு ஸ்ரீ விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமம் கும்பாபிஷேகம்! காலை மற்றும் மாலையில் தியானம் செய்யும் பக்தர்களுக்கு ஐந்து முகம் கொண்ட ருத்திராட்சை பிரசாதமாக வழங்கப்படும்
திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவலப் பாதை அடி அண்ணாமலையார் திருக்கோவில் அருகில் உள்ள ஓம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமம் புதிதாக அமைக்கப்பட்டு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் யாக சாலை அமைத்து மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்
சென்னை மாவட்டம் சேர்ந்த யோகேஸ்வர் லாஜ்வந்தி இவர்களது தாய் தந்தையார் விஜயலட்சுமி ஆனந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு இயற்கை மரணம் அடைந்தனர் இவர்களுக்கு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவல பாதை ஓம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஜயலட்சுமி ஆனந்த ஆசிரமம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று இன்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் பூர்ணாஹுதி செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தை கோயில் உச்சியில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள 100க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு புதிய புத்தாடைகள் மற்றும் அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டன மேலும் ஆண்டுதோறும் இவர்களது நினைவு நாள் அன்று சாதுக்களுக்கு அன்னதான வழங்குவதும் மற்றும் புத்தாடைகள் வழங்குவதும் வழக்கமாக கொண்டு வர போவதாகவும் மற்றும் இந்த ஆசிரமத்தில் மற்றும் மாலையில் தியானம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஐந்து முகம் கொண்ட உத்திராட்சை வழங்கப்படும் என ஆசிரமத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது...



Comments
Post a Comment