202ம் ஆண்டு கூத்தாண்டவர் தேர் திருவிழா, 33 அடி உயரம் கொண்ட தேறினை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடந்தவாடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் 202 ஆம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மகாபாரத விரிவுரை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 20 நாட்களாக நடைபெற்று வந்தது.
கூத்தாண்டவர் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் ரத தேரோட்டம் இன்று நடைபெற்றது. 33 அடி உயரம் கொண்ட கூத்தாண்டவர் தேறினை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவருக்கு இன்று காலை பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. மும்பை, சென்னை, திருவண்ணாமலை, மேல்மலையனூர் பகுதிகளில் இருந்து வந்துள்ள திருநங்கைகள் குழுவினர் மற்றும் வேடந்தவாடி அருக்கார் குடும்பத்தார் இணைந்து பெண் அழைப்பு நிகழ்ச்சி மற்றும் கல்யாணமும் நடைபெற்றது.
விநாயகர் சிலை கொண்ட தேர் முதலில் செல்ல அதனை அடுத்து ஸ்ரீ கூத்தாண்டவர் ரதம் மற்றும் முத்தாலம்மன் தேர் உள்ளிட்டவை ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் தேர் ஊர்வலமாக வந்தது.
வேடந்தவாடி, மங்கலம், கருமாரப்பட்டி, அவலூர்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கூத்தாண்டவர் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
வேடந்தவாடியில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து குவிந்துள்ள திருநங்கைகள் கும்மியடித்து பாட்டு பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்
இன்று மாலை 6 மணி வரை கூத்தாண்டவர் ரதத்தின் ஊர்வலம் நடைபெற்று கூத்தாண்டவர் ஆலயத்தில் முடிவடைந்த பின்னர் திருநங்கைகளின் தாலியருக்கும் நிகழ்வு நடைபெறும்.
கூத்தாண்டவர் தேர் திருவிழாவை ஒட்டி பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.
அசம்பாவித சம்பவங்கள் தடுக்கும் விதமாக மங்கலம் காவல் நிலைய போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் அவசர மருத்துவ உதவிக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.





Comments
Post a Comment