திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு பைபாஸ் சாலையில் உள்ள மருத்துவர் இராஜா ஹரிகோவிந்தன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு உலக சாதனைகளை புரிந்து பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
நாட்டில் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்தல் , துணி பையை பயன்படுத்துதல் இவற்றிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2200 கிலோ எடை கொண்ட காரை பற்களால் கடித்து 200 மீட்டர் இழுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை UNIVERSAL BOOKS OF RECORDS 2005 Anos Vega அங்கீகரித்து உலக சாதனையாளர் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கி உள்ளது.
இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாராட்டி மருத்துவர் ராஜா ஹரிகோவிந்தனுக்கு சான்றிதழ்களை வழங்கி வெகுவாக பாராட்டினார்.
இத்துடன் ஒரு விரலால் 2200 கிலோ எடையுள்ள காரை இழுத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அவருடைய மகன்கள் H.ஹனீஷ்குமார் மற்றும் H.தர்ஷன் ஆகியோரும் இளம் வயதிலேயே பொதுத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யோகாசனங்கள் செய்து சாதனை புரிந்து உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு அம்சங்கள் ஆகும்.





Comments
Post a Comment