திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஸ்டேட் பேங்க் கிளை எதிரில் கீழ்பென்னாத்தூர் காங்கிரஸ் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பாஜக மோடி அரசு நிரபந்தத்தினால் அவர்கள் பெற்ற ரூபாய் 6566 கோடி தேர்தல் பத்திரங்களை யாரிடம் இருந்து பெற்றார்கள் என்பதனை மறைக்க உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கியையும் மத்திய பாஜக மோடி அரசின் மோசடிப் போக்கையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். கீழ்பென்னாத்தூர் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், நகர தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் செட்டியார், மாவட்டத் துணைத் தலைவர் கராத்தே ராஜா, நகர பொருளாளர் இளையராஜா, முன்னாள் நகரத் தலைவர் ராஜாமணி,
காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் சரவணன், பிரபு, நிர்வாகி கோவிந்தன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய அரசிற்கும், ஸ்டேட் பாங்கிற்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.





Comments
Post a Comment